அலட்சியமா? அரசுமருத்துவமனையில் குப்பைக் மேட்டில் 24 மணி நேரமாக உயிருக்கு போராடிய முதியவர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!!



injured-elderly-man-found-in-garbage-at-jalaun-medical-

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டம் உராயில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் காயமடைந்த அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் குப்பை மேட்டில் உயிருடன் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகப்பேறு பிரிவுக்கு எதிரே சாக்கடை அருகே, குப்பைகளுக்கு மத்தியில் அவர் சுமார் 24 மணி நேரத்துக்கும் மேலாகக் கிடந்ததாக கூறப்படுகிறது. தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குப்பை மேட்டில் உயிருக்கு போராடிய முதியவர்

திங்கட்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில், குப்பைகளுக்கு நடுவே முதியவர் ஒருவர் அசைவின்றி கிடந்த நிலையில் மூச்சுவிட்டுக் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. காயமடைந்த நிலையில் இருந்த அவருக்கு மருத்துவமனை வளாகத்திலேயே முறையான முதலுதவி அல்லது சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பிரசவத்தில் இறந்தே பிறந்த பிஞ்சு குழந்தை! அடுத்து சில மணி நேரத்தில் தாயும் இறப்பு...! நடந்தது என்ன? மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்...!!!

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ

முதியவர் குப்பையில் கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மருத்துவமனை வளாகத்திலேயே ஒருவர் நீண்ட நேரம் கவனிப்பாரின்றி கிடந்ததாக வெளியான தகவல், அங்குள்ள நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

வீடியோ பரவி பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். குப்பை மேட்டில் கிடந்த முதியவரை மீட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளனர். அவரது உடல்நிலை குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதேநேரத்தில், முதியவர் அங்கு எப்படி வந்தார், அவரை ஏன் உடனடியாக மருத்துவக் குழுவினர் கவனிக்கவில்லை என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

இதையும் படிங்க: பயங்கர விபத்து! சாலையில் ஆறாக ஓடிய கடுகு எண்ணெய்..! ஆபத்தான நேரத்தில் உதவாமல் மக்கள் செய்த காரியத்தை பாருங்க... வைரல் வீடியோ!!!