லட்சக்கணக்கில் சம்பளம் என்று பேசுபவர்களுக்கு... இந்த சீருடை நிலையை பாருங்க! மைனஸ் 10 டிகிரி குளிரில் மரக்கட்டையாவே மாறிடுச்சு! எல்லை பாதுகாப்பு ராணுவ வீரரின் வேதனை..! கண் கலங்க வைக்கும் காட்சி..!!!



indian-army-frozen-uniform-viral-video

மைனஸ் டிகிரி குளிரில் எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பனிமலையில் துவைத்து காயவைக்கப்பட்ட ராணுவ சீருடை உறைந்து, மரக்கட்டை போல மாறியிருக்கும் காட்சிகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்த வீடியோ குறுகிய நேரத்தில் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மைனஸ் 10 டிகிரியில் உறைந்த சீருடை

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், இரவு நேரத்தில் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் நிலவும் பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் தனது சீருடையை காட்டுகிறார். அவர் துவைத்து வெளியே காயவைத்திருந்த சீருடை, அங்கு நிலவும் மைனஸ் 10 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையால் முழுமையாக உறைந்துள்ளது.

இதையும் படிங்க: அடக்கடவுளே..! பள்ளிக்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்த 9 வயது சிறுவன்! உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய ஆசிரியர்... அடுத்த சில நிமிடங்களில் துடிதுடித்து இறந்த மாணவன்..! பள்ளியில் உறவினர்கள் போராட்டம்..!!!

சாதாரண துணியைப் போல அசைக்க முடியாத அளவுக்கு அது கடினமாக மாறியிருக்கிறது. சீருடையைத் தொட்டுப் பார்க்கும்போது கடினமான பொருளைத் தட்டுவது போன்ற சத்தம் கேட்கிறது. அதை வளைக்க முயன்றாலும் வளைந்து கொடுக்காமல் உறைந்த நிலையில் இருப்பதை அந்த வீரர் வீடியோவில் விளக்குகிறார்.

சம்பளத்தைப் பேசுபவர்கள் சீருடையின் நிலையைப் பாருங்கள்

வீடியோவின் தொடக்கத்தில், 'ராணுவத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள் என்று பலர் பேசுகிறார்கள்; ஆனால் இந்தச் சீருடையின் நிலையைப் பாருங்கள்' என அந்த வீரர் சிரித்தபடி கூறுகிறார். அவரது பேச்சும், உறைந்த சீருடையின் நிலையும் வீடியோவைப் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பனிமலைப் பகுதிகளில் சாதாரணமாக துணிகளைத் துவைத்து காயவைக்கக்கூட எவ்வளவு சிரமம் என்பதை இந்தக் காட்சி உணர்த்துகிறது. எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் அன்றாட தேவைகளுக்காகவும் கடுமையான இயற்கைச் சூழலை எதிர்கொள்வதை இந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவும் வீடியோ

வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ பலரது கவனத்தைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையை இந்தக் காட்சி மீண்டும் மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

 

இதையும் படிங்க: என்ன மனுஷன்யா இவரு..? உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 13-ம் நாள் காரியம் செய்த 80 வயது முதியவர்..! பின்னணி அதிரவைக்கும் காரணம்... வியக்கவைக்கும் சம்பவம்..!!!