தமிழக ஆளுநர் ஆர். வி. அர்லேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதி..! காலையிலேயே வெளியான ஷாக் நியூஷ்..!!!



tamil-nadu-governor-hospitalised-chennai

தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அவர், மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் சிகிச்சை முடிந்து அவர் ஆளுநர் மாளிகைக்குத் திரும்புவார் என அவரது மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை

நேற்று மாலை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர், தொடர்ந்து இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

இதையும் படிங்க: எனக்கு அந்த பொறுப்பு வேணும்...! அப்போ தான் சமரசம் பேச்சுக்கே இடம்..... கோபத்தில் கொந்தளிக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்! திமுக தலைமைக்கு வந்த கடும் சவால்!!!

இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

சிகிச்சைக்குப் பிறகு ஆளுநர் மாளிகைக்குத் திரும்புவார்

இரண்டு நாட்கள் சிகிச்சை முடிந்ததும் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நலமுடன் மீண்டும் ஆளுநர் மாளிகையான லோக் பவனுக்குத் திரும்புவார் என அவரது மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: 2 மாதம் தீவிர சிகிச்சை! எழுந்து நின்றவர்.. தொற்று அதிகரித்ததால் மீண்டும் படுத்த படுக்கையான வி.எஸ். பாபு..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!!!