எனக்கு அந்த பொறுப்பு வேணும்...! அப்போ தான் சமரசம் பேச்சுக்கே இடம்..... கோபத்தில் கொந்தளிக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்! திமுக தலைமைக்கு வந்த கடும் சவால்!!!



anitha-radhakrishnan-dmk-leadership-discontent

திமுக தலைமை மீது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அதிருப்தி அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிகழ்வுகளில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கட்சியின் முக்கிய நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் பங்கேற்கவில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

கே.என். நேரு இல்லத் திருமண விழாவைப் புறக்கணித்தாரா

கடந்த 16-ஆம் தேதி சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை எனப் பிரபல நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் ஆதிக்கத்தை தொடர அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!

தலைமை மீதான அதிருப்தியின் காரணமாகவே அவர் விழாவைத் தவிர்த்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அவரது வருகை இல்லாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மாநில அளவிலான பொறுப்பு கேட்கிறாரா

கட்சியில் தனக்கு மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டால் மட்டுமே தலைமையுடன் சமரசமாகச் செல்ல முடியும் என்ற முடிவில் அனிதா ராதாகிருஷ்ணன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அனிதா ராதாகிருஷ்ணனின் அதிருப்தி குறித்த தகவல்கள் கட்சிக்குள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இதற்கு திமுக தலைமை என்ன பதில் நடவடிக்கை எடுக்கும் என்பது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் தெரியவரும்.

 

இதையும் படிங்க: அதிமுக-வுக்கு திமுக வைத்த அதிர்ச்சி வைத்தியம்! மதுரையில் கவிழ்ந்தது அதிமுக கோட்டை.... சற்றுமுன் பரபரப்பு..!!!