மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்...? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி விளக்கம்..!!!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 17 லட்சம் பயனாளிகளில் 50 சதவீதம் பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது. இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில், வழக்கமாக உரிமைத்தொகை பெற்று வந்த சில பெண்களுக்கு இந்த மாதம் பணம் வரவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.
1.29 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், கடந்த 15-ஆம் தேதி 1,29,97,568 தகுதியான பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா 1,000 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பயனாளிகளின் விவரங்களைச் சரிபார்த்து, அவற்றைப் புதுப்பிக்கும் பணிகள் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக நடைபெறும் நடைமுறைதான் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: BREAKING : ரூ.5000-ல் இருந்து ரூ.7000-ஆக உயர்த்திய CM விஜய்...! தொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!,
இந்தப் பணிகளால் தகுதியான பயனாளிகள் யாரும் நீக்கப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்பி பெண்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பணம் வரவில்லை எனப் பெண்கள் புகார்
அரசின் விளக்கத்துக்குப் பிறகும், வழக்கமாக மாதந்தோறும் 1,000 ரூபாய் பெற்று வந்த தங்களது வங்கிக் கணக்கில் இந்த மாதம் பணம் வரவில்லை எனப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
வங்கித் தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது நிர்வாக ரீதியாக ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே பயனாளிகளின் கோரிக்கையாக உள்ளது. பணம் கிடைக்காமல் விடுபட்டவர்களின் விவரங்களைச் சரிபார்த்து, அவர்களுக்கும் விரைவில் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை...! CM விஜய் எடுத்த அதிரடி முடிவு..! இல்லத்தரசிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஷ்..!!!