வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணம்....! 75,000 கடன் தள்ளுபடி.. விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் விஜய்..!!



tamilnadu-crop-loan-waiver-75000

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 2025 மே 1 முதல் 2026 மார்ச் 31 வரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.

ஏற்கெனவே கடனை செலுத்தியவர்களுக்கும் சலுகை

நவம்பர் 6-ஆம் தேதி அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பே தகுதியான விவசாயிகள் தங்களது பயிர்க்கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தியிருந்தாலும், அவர்களுக்கும் உரிய தள்ளுபடித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும்.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.. பயிர்க்கடன் தள்ளுபடி..! விவசாயிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!!!

நவம்பர் 30-க்குள் கடனை செலுத்த அறிவுறுத்தல்

பகுதி கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள், தங்களது எஞ்சிய கடன் தொகையை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி கணக்கை நேர் செய்தால், அந்தத் தொகைக்கான வட்டியையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையைப் பெற தகுதியுள்ள விவசாயிகள் தங்களது கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி விவரங்களைத் தெரிந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்...? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி விளக்கம்..!!!