₹50 லட்சம் முதல் பரிசு.. கொரோனா பரவலை தடுக்க மகராஷ்டிரா மாநிலம் புதிய முயற்சி.!

₹50 லட்சம் முதல் பரிசு.. கொரோனா பரவலை தடுக்க மகராஷ்டிரா மாநிலம் புதிய முயற்சி.!



indiamake-your-village-corona-free-win-rs-50-lakh-mahar

இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் இதுவரை 96 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கிராம புறங்களில் பரவி வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிய வித்தியமான முயற்சி ஒன்றை அறிவித்துள்ளார்.

அதாவது கிராம பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கிராமங்களுக்கான போட்டியை 'கொரோனா இல்லாத கிராமம்' என்ற போட்டியை அறிவித்துள்ளார்.

50 lakh prize

மேலும் இது குறித்து அம்மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் கூறியதாவது, இப்போட்டியின் கீழ் ஒவ்வொரு வருவாய் பிரிவிலும் கொரோனா இல்லாத 3 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசு ரூ.50 லட்சம், இரண்டாவது பரிசு ரூ.25 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசு ரூ.15 லட்சம் வழங்கப்படும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆறு வருவாய் பிரிவுகள் உள்ளன. அதன்படி மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 5.4 கோடி மாநில அரசு சார்பில் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.