குப்பையில் சடலமாக கிடந்த சிசு.. இன்ஸ்ட்டா நட்பால் நேர்ந்த விபரீதம்.. 16 வயதில் சோகம்.!



in Gujarat Surat Baby Found from Garbage 


குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், அபெக்ஸ் நகர் பகுதியில் உள்ள குப்பைமேட்டில், பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிசுவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், குழந்தையின் சடலம் இங்கு வந்தது எப்படி? யாருக்கு பிறந்த குழந்தை? என விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் 16 வயது சிறுமி சந்தேக வலையில் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டார். 

gujarat

இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம்

அப்போது, சிறுமி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு 16 வயது ஆகும் நிலையில், அவருக்கு உத்திரபிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் சிறுவனுடன் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டு பழகி வந்துள்ளார். 

இதையும் படிங்க: 8 வயது சிறுமி மாரடைப்பால் பள்ளி வளாகத்திலேயே மரணம்; கேமிராவில் பதிவான இறுதி காட்சிகள்.!

சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் சிறுமியை தொடர்புகொண்டு சூரத் வரசொல்லிய நிலையில், அங்கு இருவரும் தனிமையில் சந்தித்து இருக்கின்றனர். இதனால் சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார். 

சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த சிறுமி பெற்றோருக்கு பயந்து கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டுள்ளார். இதனால் அவரின் குழந்தை உடலில் இருந்து வெளியேறி இருக்கிறது என்பது அம்பலமானது. 

இதனையடுத்து, உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நபருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சாட்டை, குஜராத்தில் பெல்ட்.. அண்ணாமலை பாணியை கையில் எடுத்த குஜராத் ஆம் ஆத்மீ பிரமுகர்.!