மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்.! பரிதாபமாக பறிபோன 8 உயிர்கள்!!



Husband killed 7 family members for wife asking divorce

அமெரிக்கா உதா மாகாணம் சால்ட் வேல் சிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் 8 பேர் பிணமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது 5 குழந்தைகள் உட்பட 8 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர். 

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், மிக்கேல் கெயில் என்பவர் தனது மனைவி, மாமியார், 3 மகள்கள் மற்றும் 2 மகன்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதாவது சமீபகாலமாக மிக்கேலுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு, பிரச்சினை நிலவி வந்ததால், கணவரை பிரிய முடிவு செய்து மிக்கேல் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

divorce

இதனை அறிந்த மிக்கேல், மனைவியை சமாதானம் செய்துள்ளார். ஆனாலும் அவரது மனைவி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததால் கோபமடைந்த அவர் மனைவி, மாமியார், குழந்தைகள் என அனைவரையும் தூங்கி கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். பின்னர் தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.