பலத்த மழையால் இடிந்து விழுந்த வீடு: இடிபாடுகளில் சிக்கிய இளம்பெண் பரிதாப பலி..!

பலத்த மழையால் இடிந்து விழுந்த வீடு: இடிபாடுகளில் சிக்கிய இளம்பெண் பரிதாப பலி..!


House collapsed due to heavy rains: Young girl trapped in debris dies tragically

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன், அனைத்து அணைகளும் முழுவதுமாக நிரம்பி விட்டன. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் பாலக்காடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்துவந்தது. இதனால் கோங்காடு பகுதியில் வினோத் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவரது மனைவி மல்லி (28) மீது கட்டித்தின் இடிபாடுகள் விழுந்தது. இதில் அவர் மற்றும் வினோத் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ளோர் விரைந்து வந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய கணவன், மனைவி 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி மல்லி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து வினோத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.