மேலதிகாரிகள் கொடுத்த நெருக்கடி! தூக்கில் தொங்கிய சுகாதாரத்துறை அதிகாரி! ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

மேலதிகாரிகள் கொடுத்த நெருக்கடி! தூக்கில் தொங்கிய சுகாதாரத்துறை அதிகாரி! ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!



health department officer suicide

மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தலைமை சுகாதார அதிகாரி நாகேந்திரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுகாதார இலக்கை முழுமையாக எட்டவில்லை என நெருக்கடி கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் தலைமை சுகாதார அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் நாகேந்திரா.  கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்துள்ளார்.

corona

சுகாதாரத்துறை கொடுத்த இலக்கை எட்ட முடியாததால் சுகாதாரத்துறை மேலதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாகவும் இதனால் சுகாதாரத் துறையின் தலைமை சுகாதார அதிகாரி நாகேந்திரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

குடும்பத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சுகாதாரத் துறையில் தீவிரமாக பணி செய்து மன அழுத்தத்தில் இருந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட சுகாதாரத்துறை அதிகாரி குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.