2 நாட்களாக முடங்கிய பிரபல தனியார் வங்கியின் நெட்பேங்கிங் வசதி! அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!

2 நாட்களாக முடங்கிய பிரபல தனியார் வங்கியின் நெட்பேங்கிங் வசதி! அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!



HDFC Bank Net Banking and Mobile Apps Down for Over 24 Hours

இந்தியாவில் உள்ள பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியின் நெட்பேங்கிங் வசதி நெற்றில் இருந்து முடங்கி இருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பவோ அல்லது மற்ற செயல்களில் ஈடுபட முடியாமலும் தவித்துவருகின்றனர்.

மேலும், ஒருசில வாடிக்கையாளர்களுக்கு நேற்றில் இருந்து இந்த வசதியை பயன்படுத்த முடியவில்லை எனவும், ஒருசிலர் இன்று காலையில் இருந்து இந்த வசதியை பயன்படுத்த முடியவில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

HDFC Bank

இதுகுறித்து HDFC வங்கியின் நெட்பேங்கிங் இணையதளத்தை பார்வையிடும்போது அதிகப்படியான வாடிக்கையாளர்கள் நெட்பேங்கிங் வசதியை பயன்படுத்தி வருவதால் சர்வர் பிசியாக உள்ளதாக செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து HDFC வங்கி தனது சமூக வலைத்தளத்தில் ஒருசில தொழில்நுட்ப கோளாறு நிகழ்வதாகவும், விரைவில் இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிடும் எனவும் தெரிவித்துள்ளது.