குழந்தை, குடும்பத்தலைவர் கண்முன் 3 இளம்பெண்கள் 4 பேர் கும்பலால் கூட்டாக சேர்ந்து கற்பழிப்பு; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

குழந்தை, குடும்பத்தலைவர் கண்முன் 3 இளம்பெண்கள் 4 பேர் கும்பலால் கூட்டாக சேர்ந்து கற்பழிப்பு; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!


hariyana Panipat Gang Rape 3 Women by 4 Robbers 

 

ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களால் குடும்பத்தோடு வீடு எடுத்து தங்கி இருக்கின்றனர். 

சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் அவர்களின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளை கும்பல், பயங்கர ஆயுதங்களை காண்பித்து வீட்டின் தலைவர், குழந்தைகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. 

பின்னர் அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி வீட்டில் இருந்த பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறித்த 4 பேர் கும்பல் அதோடு விடாமல் அதிர்ச்சியுறும் செயலை செய்துள்ளது. 

வீட்டில் 24, 25, 35, 45 வயதுடைய பெண்கள் இருந்த நிலையில், இவர்களில் 3 பேரை கத்தி முனையில் குடும்பத்தினர் கண்முன்னே கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. 

haryana

இவர்களில் 45 வயது பெண்மணி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கொள்ளை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது தாக்கப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

குடும்பத்தினரை விட்டுவிடக்கூறி குழந்தைகள் முதல் பெரியவர் வரை என கொள்ளை கும்பலின் காலில் விழுந்தும் பலனில்லை. இதே கும்பல் அதே கிராமத்தில் வேறொரு வீட்டில் கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றி இருக்கிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர். கொள்ளை கும்பல் குறித்த தடயம் சேகரிக்கப்பட்டு வருகிறது.