ஓடும் வாகனத்தில் மாணவிகள் கூட்டுப்பாலியல் பலாத்கார முயற்சி; நடுரோட்டில் குதித்து தப்பிய அதிர்ச்சி சம்பவம்.!gujarat-udaipur-school-girl-jump-off-truck-avoid-molest

 

குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா உதய்பூர் மாவட்டம், சங்கேடா பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில், அப்பகுதியை சேர்ந்த மாணவிகள் பயின்று வருகிறார்கள். 

சம்பவத்தன்று மாணவிகள் தாங்கள் வழக்கமாக பயணிக்கும் வாகனத்தில் வீடு திரும்பியபோது, அதில் இருந்த கும்பல் மாணவிகளை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளது. 

பதறிப்போன மாணவிகளில் 6 பேர் வாகனத்தில் இருந்து குதித்து தப்பி இருக்கின்றனர். சிலர் வாகனத்தில் இருந்தபடி அலறி, அங்கும் இங்கும் ஓடி இருக்கின்றனர். 

இதனால் நிலைதடுமாறி வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மாணவிகளை மீட்ட பொதுமக்கள், அவர்களிடம் விபரத்தை கேட்டறிந்து, ஓட்டுனரை பிடித்துக்கொண்டனர். பிறர் ஓட்டம் பிடித்தனர்.

பின் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அதிகாரிகள் ஓட்டுநர் சுரேஷ் பில் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

லேசான காயத்துடன் சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அஸ்வின் பில், சுரேஷ் பில், அர்ஜுன் பில், பரேஷ் பில், சுனில் பில் மற்றும் ஷைலேஷ் பில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சியோருக்கு வலைவீசப்பட்டுள்ளது.