இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு.! மத்திய அரசு அதிரடி அவசர உத்தரவு!

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு.! மத்திய அரசு அதிரடி அவசர உத்தரவு!


govt order for corona


சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி  உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ்,வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது. கொரானாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் நோய்க்கிருமி பரவும் வேகத்தை முழுமையாக கட்டுப் படுத்த முடியவில்லை.


நேற்றுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து, பலி எண்ணிக்கை 100-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதிலும், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

corona

தற்போது நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போதிலும், பல இடங்களில் வெளியே செல்பவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்கிறார்கள். முக கவசம் அணியாமலும் நடமாடுகிறார்கள். சிலர் தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுகின்றனர் \. இந்தநிலையில் மத்திய அரசு நேற்று ஒரு அவசர உத்தரவு பிறப்பித்தது.

அதில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே கால் வைத்தால், வீட்டில் தயாரிக் கப்படுகிற சாதாரண முக கவசங்களை கட்டாயம் அணிந்து கொண்டுதான் வெளியே வர வேண்டும் என்றும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த இது மிகவும் அவசியம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.