இந்தியா

ஆசையாக பர்கர் சாப்பிட்டு துடிதுடித்த இளைஞன்! பர்கரின் உள்ளே இருந்ததை கண்டு பேரதிர்ச்சி அடைந்த நண்பர்கள்!!

Summary:

glass pieces inside youngman eating burger

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வசிப்பவர் சஜித் பதான். ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பிரபல கடை ஒன்றிற்கு பர்கர் சாப்பிட சென்றுள்ளார். 

அப்பொழுது சஜித் பதான் பர்கரை சாப்பிடத் துவங்கியபோது அவரது தொண்டைக்குள் கூரான பொருள் ஒன்று குத்தி சிக்கிக் கொண்டது. மேலும் அவரது  வாயில் இருந்து ரத்தம் கசிந்த நிலையில் அவர் வலியால் துடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் சஜித் சாப்பிட பர்கரை பிரித்து பார்த்தபோது அதில் சில உடைந்த கண்ணாடித் துண்டுகள் இருந்துள்ளது.

burger க்கான பட முடிவு

 இதனை தொடர்ந்து விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஜித் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது உடல்நலத்துடன் உள்ளார். இதனை தொடர்ந்து அவர் அந்த பர்கர் கிங் கடை மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் பட்கரின் உள்ளே கண்ணாடித்துண்டுகள் எப்படி வந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement