விதவை பெண்ணை கற்பழித்து, குழந்தையை காட்டி நடந்த கொடூரம்.. பகீர் சம்பவம்..!



girl-raped-after-death-her-husband-in-bihar

கணவருக்கு உதவி செய்வது போல வந்து, மனைவியை பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் பகுதியில் கணவன்-மனைவி தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அருகாமையில் வசிக்கும் பிரசாந்த் ஜோஷி அவருக்கு உதவி செய்வது போல அங்கு வந்துள்ளார். 

தொடர்ந்து கணவருக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் நோயுற்று இறந்த நிலையில், விதவையான பெண்ணிடம், 'தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என கூறி ஆசை வார்த்தையில் மயக்கியுள்ளார். அத்துடன் அந்தப் பெண்ணை வற்புறுத்தி அடிக்கடி உடலுறவு கொண்டுள்ளார்.

Bihar

இதனையடுத்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது, அதற்கு ஒப்புக் கொள்ளாத பிரஷாந்த் தகராறு செய்துள்ளார். மேலும், தான் ஏமாற்றப்பட்டதையறிந்த பெண் கோபமுற்று அவரிடம் சண்டை போட்ட நிலையில், 'உன் குழந்தைகளை கடத்தி சென்று விடுவேன், இனி என்னிடம் பேசாதே' என மிரட்டியுள்ளார். 

இதனால் பயந்துபோன பெண், பிரஷாந்த் மீது அங்குள்ள காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.