இந்தியா

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான இளம்பெண்! அலங்காரம் செய்ய சென்ற இடத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி! துயர சம்பவம்!

Summary:

Girl murdered on wedding day by youngman

மத்தியபிரதேசம் ரத்லம் மாவட்டம் ஜவ்ரா என்ற பகுதியை சேர்ந்தவர் சோனு யாதவ். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கணவன் மற்றும் மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சோனுவிற்கு  சமீபத்தில் கவுரவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களுக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில்  திருமணத்திற்காக அலங்காரம் செய்துகொள்ள சோனு தனது வீட்டிற்கு அருகேயுள்ள அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார்.

 அப்பொழுது அங்கு வந்த இளைஞர் ஒருவர்,  சோனுவிற்கு போன் செய்து வெளியே வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தநிலையில் திடீரென உள்ளே புகுந்த இளைஞன் கத்தியால் சோனுவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்துவிழுந்த சோனுவை மீட்டு அங்கிருந்தவர்கள்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றநிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சோனுவிற்கு கடந்த சில ஆண்டுகளாக இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில் சோனுவிற்கு திருமணம் என கேள்விப்பட்டதும் அவர் இத்தகைய கொடூர செயலை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

 மேலும் அந்த இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement