180 பேரின் உயிர் காத்த மகா வீரனுக்கு 1 கோடி வெகுமதி அளித்த Mankind pharma நிறுவனம்..! விமானிக்கு விழுந்த பாராட்டு மழை..!!!



flydubai-pilot-smith-machar-reward

Fly Dubai விமானத்தில் பயணித்த 180 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ரூ.1 கோடி வெகுமதி வழங்கப்படும் என Mankind Pharma நிறுவனம் அறிவித்துள்ளது. ஆபத்தான சூழலில் அவர் வெளிப்படுத்திய துணிச்சல் மற்றும் நிதானத்தை பாராட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விமானியை பாராட்டிய Mankind Pharma

விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சூழலை சமாளித்து பயணிகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றுவதில் ஸ்மித் மச்சார் முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரத்திலும் அவர் காட்டிய அசாதாரணமான துணிச்சல், நிதானம் மற்றும் பொறுப்புணர்வை பாராட்டும் வகையில் Mankind Pharma நிறுவனம் ரூ.1 கோடி வெகுமதியை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அது என் மகன் தான்..! அவனது உடலை கொடுங்க! ஆனால்.. மறுத்த போலீஸ் அதிகாரிகள்! 15 மாத போராட்டதுக்கு பிறகு வெளிவந்த DNA டெஸ்ட் உண்மை...! இறுதியில் அந்த தந்தை செய்த அதிர்ச்சி காரியம்..!!!

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விமானி

இதனிடையே, சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சாரை பிரதமர் மோடி வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஆபத்தான சூழலிலும் பயணிகளின் உயிரைக் காப்பாற்ற அவர் மேற்கொண்ட நடவடிக்கையை பிரதமர் பாராட்டினார்.

துணிச்சலுக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஸ்மித் மச்சாரின் வீரத்தையும், பயணிகளை பாதுகாப்பாக காப்பாற்றிய அவரது சாதுர்யமான செயலையும் பிரதமர் மோடி நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தற்போது விமானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது துணிச்சலை கவுரவிக்கும் வகையில் ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: பிருந்தாவனம் ஆசிரமத்தில் நீடிக்கும் மர்மம்! 16 வயது சிறுவனுக்கு என்னாச்சு? 3 மாசமா என் மகனைப் பார்க்கக் கூட விடல..... தர்ணா போராட்டத்தில் குடும்பத்தினர்கள்!