கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் தீராத வியாதிகளும் தீரும்! மன்மத சாமியார் மாமியார் வீடு போன கதை!

கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் தீராத வியாதிகளும் தீரும்! மன்மத சாமியார் மாமியார் வீடு போன கதை!


fake-god-man-arrested-at-asaam

இந்தியாவில் தற்போது பல போலி சாமியார்கள் கைதாவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் அசாமில் சாமியார் ஒருவர் பெண்களின் நோய்களை தீர்ப்பதாக கூறி அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமு பிரகாஷ் சவுகான் என்ற சாமியார் தான் விஷ்ணு பக்தன் எனவும், கடவுள் தன் உடலில் இருக்கிறார் எனவும் கூறி பொதுமக்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார்.

Fake god man

தன்னிடம் வரும் பெண்களை அணைத்தபடியும், அவர்களுக்கு முத்தம் கொடுத்தபடியும் ஆசிர்வாதம் வழங்குவதுதான் இவரது ஸ்டைலாம்.

அப்படி பிரகாஷ் கட்டியணைது முத்தம் கொடுத்தால் தீராத பிரச்சனைகள் மற்றும் நோய்கள் தீரும் என நம்பவைத்துள்ளார். இதனால் இவரிடம் வரும் பெண்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

இதனால் இவரது புகழ் பரவி நாளுக்கு நாள் இவரிடம் வரும் பெண்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனை அறிந்த லோக்கல் தொலைக்காட்சி நிறுவனம் ஓன்று இவரது செயல்களை படம்பிடித்து பரப்பியுள்ளது. 

இதை பார்த்து அதிர்ந்த பொலிசார் சாமியார் பிரகாஷிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பயந்து போன சாமியார் நான் விஷ்ணு பக்தர் என்பதெல்லாம் பொய் எனவும் பெண்கள் உட்பட எல்லாரையும் ஏமாற்றி தான் வந்தேன் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.