
Domestic violence raised against to women due to lock down
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் வருத்தம் தெரித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த ஊரடங்கு சமயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேஹா ஷர்மா கூறுகையில்,
மார்ச் 24ம் தேதியில் இருந்து இதுவரை 257 புகார்கள் வந்திருப்பதாகவும், அதில் 69 புகார்கள் வீடுகளில் நிகழும் வன்முறைகள் குறித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் 3 புகார்கள் மட்டுமே வந்ததாகவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பிறகு புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், புகார் கூறும் பெண்கள் அனைவரும் மின்னஞ்சல் மூலமே புகார்களை கூறிவருவதாகவும், தபால் சேவை இயங்காததால் இணையத்தை பயன்படுத்த தெரியாத பெண்களின் புகார்கள் வராமலும் இருக்கலாம் என வருத்தம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement