ஒரே நொடி.. சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த உதயம் திரையரங்கம்; நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்.!
பிறந்து 2 நாளே ஆன குழந்தையை தூக்கிச்சென்று கடித்துக் கொன்ற நாய்கள்..! தனியார் மருத்துவமனையில் அவலம்.!

ஹரியானா மாநிலத்தில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து, பிறந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் இழுத்து சென்று கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் 25-ஆம் தேதி ஷப்னம் என்பவருக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்றிரவு மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருந்த தாய் அருகில் இருந்து பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை நாய்கள் தூக்கிச் சென்றன.
அதிகாலை 2.15 மணியளவில் குழந்தை காணாமல் போனதை குடும்பத்தினர் கவனித்தனர். இதனையடுத்து குழந்தையை மருத்துவமனை முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. இந்தநிலையில் மருத்துவமனைக்கு பக்கத்தில் உள்ள நிலத்தில் ஒரு நாய் குழந்தையை வாயால் பிடித்துக் கொண்டிருப்பதைக் குடும்பத்தினர் பார்த்து பேரதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து உடனடியாக நாயிடமிருந்து குழ்நதையை மீட்ட குடும்பத்தினர், மருத்துவமனைக்குள் கொண்டு சென்றனர், ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.