தனக்கு சோறுபோட்டு வளர்த்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை!. உயிரை பணயம் வைத்து பெண்ணை காப்பாற்றிய நாய்!!

மத்தியப் பிரதேசத்தில் ஷோவு என்ற பெண் அவரது கணவருடன் வசித்து வந்துள்ளார். நாய்களின் மீது பிரியம் கொண்ட ஷோ, அவர் வீட்டுக்கு வெளியில் சுற்றித்திரிந்த தெரு நாய்க்கு சாப்பாடு போட்டு வளர்த்து வந்துள்ளார்.
அந்த தெரு நாயும் ஷோவின் கவனிப்பால் அவரது வீட்டிலேயே தங்கியுள்ளது. இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இல்லாததால் ஷோ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
பகல் 3 மணிக்கு ஷோ வீட்டுக்கதவை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் கதவை தட்டியுள்ளார். கதவை திறந்தவுடன் ஷோவை வீட்டுக்குள் தள்ளிவிட்டு அவரை தாக்கியுள்ளார் அந்த நபர். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.
ஷோவின் அலறல் சத்தத்தை கேட்ட நாய் அந்த நபர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. நாயிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தான் வைத்திருந்த கத்தியை வைத்து நாயை தாக்கியுள்ளார் அந்த நபர்.
ஆனாலும், ரத்தக்காயத்துடன் நாய் தொடர்ந்து அந்த நபரை தாக்கியதால் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஷோ அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.