
Dog kills born baby at hospital
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆப்ரேசன் அறைக்குள் புகுந்த நாய் ஓன்று புதிதாக பிறந்த குழந்தை ஒன்றை கடித்து குதறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பருகாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த திங்கள்கிழமை காஞ்சன் என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான குழந்தை ஓன்று பிறந்துள்ளது.
குழந்தை பிறந்து சில மணி நேரங்களில் காஞ்சன் மட்டும் வேறொரு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், குழந்தை குறித்து மருத்துவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஆப்ரேசன் அறையில் இருந்து நாய் ஓன்று வெளியே வருவதை காஞ்சனின் குடும்பத்தினர் பார்த்துள்ளனனர்.
பதறியடித்து உள்ளே சென்று பார்த்ததில் குழந்தையின் உடல் முழுவதும் இரத்த காயங்களுடன் இறந்து தரையில் கிடந்துள்ளது. தங்கள் குழந்தையை நாய் கடித்து கொன்றுவிட்டதாக உறவினர்கள் காவல் நிலையதில் மருத்துவமனை மீது புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, சம்மந்தப்பட்ட மருத்துவமனை சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. Melum, இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement