BREAKING : பதவியை விட்டு விலகுகிறேன்.... மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா..! கடிதத்தில் குறிப்பிட்ட காரணம்...!!!
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டம் அரசியல் ரீதியாக புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக எழுந்த கடும் எதிர்ப்பின் பின்னணியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நாடு முழுவதும் தீவிரமான மாணவர் போராட்டம்
நீட் தேர்வில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முடிவுக்கு வரும் உண்ணாவிரதம்?.. 4 நிபந்தனைகள் விதித்த வாங்சுக்..!
ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்ட காரணம்
தனது ராஜினாமா கடிதத்தில், இளைஞர்கள் குழப்பமான மனநிலைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும், இந்த விவகாரத்தை தேசவிரோத சக்திகள் பயன்படுத்திக் கொள்ளும் சூழலைத் தவிர்ப்பதற்கும் பதவியிலிருந்து விலகுவதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதத்தை கைவிட்ட சோனம் வாங்சுக்
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூகப் போராளி சோனம் வாங்சுக், மத்திய அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். இதேவேளை, தர்மேந்திர பிரதானின் திடீர் ராஜினாமா தேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.