ஏன் இரவு சாப்பாடு சமைக்கவில்லை? - ஆத்திரத்தில் மனைவியை மரக்கட்டையால் அடித்தே கொன்ற கணவன்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
ஏன் இரவு சாப்பாடு சமைக்கவில்லை? - ஆத்திரத்தில் மனைவியை மரக்கட்டையால் அடித்தே கொன்ற கணவன்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து மூன்றே ஆண்டுகள் ஆகும் நிலையில், அதற்குள்ளாக கணவர் மனைவியின் உடல்நிலை அறியாது நடத்திய சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
டெல்லியில் உள்ள பாலஸ்வா பகுதியை சேர்ந்தவர் பஜ்ரங்கிஜி குப்தா (வயது 28). இவர் சொந்தமாக டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனைவி பிரீத்தி (வயது 22). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதன் பலனாக தம்பதிகளுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பிரசவித்த தருணத்தில் இருந்து பிரீத்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வீட்டில் உள்ள பணிகளை செய்ய இயலாமல் தவித்து வந்துள்ளார்.
40 எடை மட்டுமே கொண்டிருந்த பிரீத்தி, குழந்தை பிறப்புக்கு பின்னர் உடல் ரீதியாக பல துயரத்தை தாங்கி வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று கணவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு பசியோடு வந்துள்ளார்.
ஆனால், அவரின் மனைவிக்கோ உடல்நிலை சரியில்லை என்பதால் அன்று சமைக்கவில்லை. எதற்காக நீ சாப்பாடு தயார் செய்யவில்லை என்று மனைவியை குப்தா கண்டிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த குப்தா, மரக்கட்டையால் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர், உறவினர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என மனைவி மயங்கி விழுந்து அடிபட்டதாக நாடகம் ஆடியுள்ளார்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் சோதித்தபோது அவர் உயிரிழந்தது உறுதியாக, தாக்குதல் நடந்து உயிரிழந்ததாக அடையாளம் தென்பட்டதால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் குப்தா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.