அதிரடி.! சரவெடி.! கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து..! அதிரடியாக அறிவித்த மாநிலம்..! வெளியானது முக்கிய அறிவிப்பு.!

அதிரடி.! சரவெடி.! கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து..! அதிரடியாக அறிவித்த மாநிலம்..! வெளியானது முக்கிய அறிவிப்பு.!



Delhi government cancelled college semester exams

டெல்லியில் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு, பள்ளி தேர்வுகள் ரத்து போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டியது கட்டாயம் எனவும், இந்த தேர்வுகளை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் யுஜிசி சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது உள்ள சூழலில் கல்லூரி தேர்வுகளை நடத்துவது என்பது இயலாத காரியம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.  மாணவர்களின் மதிப்பெண்கள் குறித்த முடிவை அந்தந்த பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துகொள்ளலாம் எனவும் டெல்லி மாநில துணை முதல்வர் மனோஜ் சிசோடியா தெரிவித்துள்ளார்.