கொரோனாவுக்கெதிராக போராடும் சுகாதாரப்பணியாளர்கள் யாரேனும் இறந்துவிட்டால் 1 கோடி வழங்கப்படும்! அரசு திடீர் அறிவிப்பு!

கொரோனாவுக்கெதிராக போராடும் சுகாதாரப்பணியாளர்கள் யாரேனும் இறந்துவிட்டால் 1 கோடி வழங்கப்படும்! அரசு திடீர் அறிவிப்பு!


delhi-cm-announced-1-crore

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் சுகாதாரப்பணியாளர்கள் யாராக இருந்தாலும் எதிர்பார்தவிதமாக உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி வழங்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் ஆரம்பித்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

corona

கொரோனா வைரஸ் எளிதாக மனிதர்களிடமிருந்து பரவுவதால், மருத்துவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் உயிரை பணையம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில்,நாட்டை பாதுகாக்கும் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு டெல்லி அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவரோ, செவிலியரோ, சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளும் நபர்களோ யாராக இருந்தாலும் எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பங்களுக்கு டெல்லி அரசு சார்பில் 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.