சிசிடிவி வைத்ததால் அதிருப்தி.. மாமனாரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மருமகள்!



Daughter in law killed father in law in uttarpradesh

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தனது நடவடிக்கைகளை கண்காணித்ததால் ஏற்பட்ட அதிருப்தியில், மாமனாரை கூலிப்படை வைத்து கொலை செய்த ஏவியதாக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 63 வயதான வினீத் மினோச்சா என்ற மருந்து வியாபாரி, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி இரவு தனது வீட்டில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 26 கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதில், மாமனார் தனது வீட்டில் பாதுகாப்புக்காக 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், அவை தனது நடவடிக்கைகளை கண்காணிப்பதாக மருமகள் ஷாலு அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் பார்ட்டிகளுக்கு செல்வதற்கு மாமனார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சிறிய செலவுகளுக்குக்கூட அவரிடம் பணம் கேட்க வேண்டியிருந்ததால் ஷாலு அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கள்ளக்காதலை பார்த்த சிறுமி… அடுத்த நொடியே நடந்த விபரீதம்! தாய், காதலன் கைது!

இதையடுத்து, மாமனாரை கொலை செய்ய முன்னாள் குடும்ப ஊழியர் விஷால் கவுதமை ஷாலு அணுகியதாகவும், கொலைக்காக ரூ.6 லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. கொலை நடந்த இரவு ஷாலு தனது கணவர் சுப்ரத்துடன் ஒரு பார்ட்டிக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. 

UttarPradesh

அங்கு அவர் தனது கணவருடன் நடனமாடிக் கொண்டிருந்த நிலையில், வீட்டில் இருந்த மாமனாரை கொலையாளிகள் தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொலையாளிகளுடன் தொடர்பில் இருந்து வீட்டின் இருப்பிடம் மற்றும் மாமனார் இருக்கும் இடம் உள்ளிட்ட தகவல்களை ஷாலு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் வீட்டுக்குத் திரும்பிய ஷாலு, மாமனார் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தது போல நடித்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் ஷாலு மற்றும் கொலைக்கு தொடர்புடையதாக கூறப்படும் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் ஷாலுவின் கணவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி கண்காணிப்பு, பணம் தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் பார்ட்டிக்கு விதிக்கப்பட்ட தடைகள் என குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள், இந்த கொலைச் சம்பவத்திற்கு காரணமாக அமைந்ததா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கணவனுக்கு மரண வலை; காதலனுடன் சேர்ந்து மனைவி அரங்கேற்றிய ‘விபத்து’ நாடகம்! அம்பலமான அதிர்ச்சி பின்னணி!