தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
பசியால் மயங்கி விழுந்த நபர்!! பாசப் போராட்டம் நடத்திய வளர்த்த மாடு!! பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...
தனது பசிக்கு வீடு வீடாக சென்று மாடு ஒன்றை வைத்து கொண்டு தர்மம் கேட்கும் நபர் ஒருவர் பசியால் மயங்கி கீழே விழும் நிலையில், பாசத்தில் மாடு செய்த பாசபோராட்டம் தற்போது இணையத்தில் பெரும் அளவில் வைரலாகி காண்போரை நெகிழ வைத்துள்ளது.
இந்த குறிப்பிட்ட வீடியோவில், மாடு ஒன்றை வைத்துக்கொண்டு குறி சொல்லும் நபர் ஒருவர் வீடு ஒன்றின் முன்பு நின்று கொண்டு பசிக்கு ஏதாவது கொடுக்குமாறு கேட்கின்றார். ஆனால் அங்கிருந்த பெண் இல்லை என்று கடுமையாக கூற அந்த வீட்டின் வாசலை விட்டு இருவரும் வெளியேறுகின்றனர்.
அடுத்த சில நொடிகளில் பசியால் அந்த நபர் மயங்கி விழுந்த நிலையில், உடனே மாடு அவரை எழுப்ப முயன்று பலமுறை தடவி கொடுக்கின்றது. இதை பார்த்து சாலையில் செல்லும் பல பேர் கண்டும் காணாமலும் சென்ற நிலையில், ஒரு சிறுமி வந்து அந்த நபர்கு தண்ணீர் மற்றும் சில வாழைப்பழத்தினைக் கொடுத்து உதவி செய்கிறார். பின்பு நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தினை வீடியோவில் காணலாம். இதோ அந்த வீடியோ காட்சி...