கொரோனா கோரதாண்டவம்! இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Summary:

Corono affected people in india

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 180க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில்  கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் இருக்கவும்,  சமூக விலகலை மேற்கொள்ளவும் தொடர்ந்து அறிவுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 2,547லிருந்து 2,902ஆக அதிகரித்துள்ளது.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 68 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 183 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இவற்றில் மகாராஷ்டிராவில் 423 பேர், தமிழகத்தில் 411பேர்,  கேரளாவில் 386 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement