இந்தியாவில் கொரோனா பாதிப்பு! தற்போதைய நிலை என்ன?

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. உலகெங்கும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு 2.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 10000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகளே பெரும் பீதியில் உள்ளது.
மேலும் இந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது.
மேலும் பல நிகழ்ச்சிகளும் தடைசெய்யப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக இருப்பதற்காகவும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாளை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#Breaking: 271 positive #CoronaVirus cases in #India, as of March 21, 10 am. #StayHomeIndia pic.twitter.com/TeatcFokQt
— Mohit Sharma (@iMohit_Sharma) March 21, 2020