தமிழகம் இந்தியா சினிமா Corono+

கொரோனா நிவாரண நிதி: தமிழ் நடிகர்களை மிஞ்சிய தெலுங்கு நடிகர்கள்! சோகத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள்!

Summary:

Corona relief funds

கொரோனாவால் நம் தேசம் பொருளாதார சரிவை சந்தித்த நிலையில், இந்தியாவில் பலர் கொரோனா நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், பாகுபலி நடிகரான பிரபாஸ் கொரோனா நிவாரண நிதிக்காக 4 கோடி ரூபாய் அளித்துள்ளார். தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் 2 கோடி ரூபாயும், மகேஷ்பாபு ஒரு கோடி ரூபாயும், சிரஞ்சீவி ஒரு கோடி ரூபாயும், அவரது மகன் ராம் சரண் 70 லட்சம் ரூபாயும் வாரி வழங்கியுள்ளனர். 

 அதேபோல் தமிழகத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்களும் நிவாரண நிதி வழங்கியுள்ளனர். ஆனால் தெலுங்கு நடிகர்களை போல அவர்கள் அல்லி கொடுக்கவில்லை எனக் கூறுகின்றனர் தன்னார்வலர்கள். 

 கொரோனா நிவாரண நிதிக்காக அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாமல் போலீசார், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். தமிழ் சினிமா நடிகர்கள் அனைவரும் கொடுத்த தொகையை விட தெலுங்கு நடிகரின் ஒருவர் கொடுத்த தொகை அதிகமாக உள்ளது. 

 இந்தியாவில் சினிமா நடிகர்களுக்கு அதிகபடியான ரசிகர்கள் உள்ள மாநிலம் எது வென்றால் அது தமிழகம் என்று கூறப்படுகிறது. ஆனாலும், இந்த கொரோனா நிவாரண நிதிக்காக தமிழ் சினிமா நடிகர்கள் கொடுத்திருக்கும் தொகைக்கு பாராட்ட தோன்றியிருந்தாலும், தெலுங்கு நடிகர்களை விட குறைவாக நிதி அளித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது என கூறுகின்றனர் தமிழ்சினிமா ரசிகர்கள்.

 உலகத்தையே அச்சுறுத்திவரும் கொடூர வைரசால் நம் தேசம் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நம்மால் முடிந்த அளவு மத்திய, மாநில அரசுக்கு நிதி உதவியை செய்வோம் என தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


Advertisement