
corona mom got delivery
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவருக்கும், அவரது கர்ப்பிணி மனைவிக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்களை தனி வார்டு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது.
இதனையடுத்து தனி வார்டில் வைக்கப்பட்டு கர்ப்பிணி பெண்ணை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று 10 நிபுணர்கள் அடங்கிய குழுவினர் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர்.
குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் எனவும் மகப்பேறு மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாய்ப்பால் வழியே பரவாது. அதனால் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்படும் எனவும், பிரசவத்திற்கு பின்னர் தாய் மற்றும் குழந்தை இருவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மருத்துவர் நீரஜா செய்தியாளர்களிடம் கூறினார்.
Advertisement
Advertisement