குட் நியூஸ்! CBSE யில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்.! 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா?

குட் நியூஸ்! CBSE யில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்.! 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா?class-of-1-to-8-th-cbse-students-are-all-pass

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் ஏப்ரல் 15-ம் தேதிவரை யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சிபிஎஸ்இயில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுகின்றனர்.

CBSC students

மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை நடப்பு ஆண்டில் அவர்கள் எழுதிய பருவத்தேர்வு, பயிற்சி தேர்வு, செய்முறை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.