இந்தியா

“வெளிய போகாதீங்க அப்பா..!” இந்த வீடீயோவை பார்த்தால் கண் கலங்காதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை.! உருக வைக்கும் வீடியோ.!

Summary:

Child crying and stop his dad to dont go out side

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ துறை ஊழியர்கள், துப்புரவு தொழிலார்கள் மற்றும் காவலர்கள் தங்கள் உறவுகளை விட்டுவிட்டு, தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களுக்காக பணியாற்றிவருகின்றனர்.

இந்நிலையில், பணிக்கு செல்லும் காவலர் ஒருவரை பணிக்கு செல்ல வேண்டாம், வெளியில் செல்ல வேண்டாம் அப்பா என்றபடி கதறி அழுது கூறும் வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோவை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், ஆபத்தை உணர்ந்தும் பணிக்கு செல்லும் காவலர்கள் நன்றி என்றும், காவல் துறையினர் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் உள்துறை அமைச்சர் அந்த பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement