தமிழகம்

வெளியானது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு.!

Summary:

Central gvt teachers recruitment board

2019 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் மத்திய இடைநிலைக் இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இத்தேர்வு கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 5ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் எழுதினால் போதுமானது.

எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டு தாள்களும் எழுத வேண்டும்.

இதில் ஒரு தேர்வை மட்டும் எழுத விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ.700 கட்டணமும், இரண்டு தாள்களும் எழுத விரும்புபவர்கள் ரூ.1200 கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ.350 கட்டணமும், இரண்டு தாள்களுக்கு ரூ.600 கட்டணமாகவும் செலுத்தவேண்டும் என சி.டி.இ.டி. அறிவித்துள்ளது.

மேலும் தெரிந்துகொள்ளவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் www.ctet.nic.in என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 


Advertisement