அதுக்கு ஒத்துக்கவில்லை என்றால், 'அந்த வீடியோவை லீக் பண்ணிடுவேன்' - காதலன் பகிரங்க மிரட்டல்.!

அதுக்கு ஒத்துக்கவில்லை என்றால், 'அந்த வீடியோவை லீக் பண்ணிடுவேன்' - காதலன் பகிரங்க மிரட்டல்.!



boy threatening a girl by our video

காதலியிடம், நாம் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிடுவேன் என கல்யாணத்திற்கு வற்புறுத்திய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டம், உப்பள்ளி டவுன் வித்யா நகரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 26 வயதான கிரண் என்பவருடன் பேஸ்புக் மூலமாக காதல் ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி வந்துள்ளனர். 

அத்துடன் போனிலும் தங்களுடைய காதலை வளர்த்து வந்துள்ளனர். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்ததை காதலன் தனது போனில் பதிவு  செய்துள்ளார். இந்நிலையில், வாலிபர் மதுப்பழக்கத்திற்கு மிகவும் அடிமையானவர் என காதலிக்கு தெரியவர, அவரிடம் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார்.

karnataka

இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி, இளம் பெண்ணிடம் வாலிபர் வற்புறுத்தியுள்ளார். இதற்கு இளம்பெண் மறுக்க, கோபமுற்ற காதலன் நாம் உல்லாசமாக இருந்த வீடியோவை 'நீ என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு விடுவேன்' என மிரட்டியுள்ளார்.

இதனைக் கேட்டு பயந்த அந்தப் பெண் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் நடந்த விஷயங்களை கூறி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை மிரட்டிய கிரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.