தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
தயவுசெய்து மறந்தும்கூட இதை மட்டும் செய்துவிடாதீங்க! உயிரே போய்விடும்!! வெளியான பகீர் சம்பவம்!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் குணா பிரதான். இவர் கட்டிடதொழில் செய்து வருகிறார். இந்நிலையில் குனா தற்போது ஜெகநாத் கோவில் கட்டுமானப் பணியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதனால் அவர் தனது சக தொழிலாளர்களுடன் பரபிப் பகுதியில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் வேலையை முடித்து விட்டு தனது அறைக்குள் தூங்குவதற்கு சென்றுள்ளார். அப்பொழுது தனது மொபைல் போனை சார்ஜ் போட்டபடியே தனது தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு அசந்து தூங்கியுள்ளார். இந்நிலையில் திடீரென அதிகாலை செல்போன் வெடித்து சிதறியுள்ளது. இந்நிலையில் செல்போனை தனது தலைக்கு அடியில் வைத்து தூங்கிய குனா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த போலீசார் குனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து செல்போனை சார்ஜ் போட்டபடியே தலையணைக்கு அடியில் வைத்தால் வெப்பம் அதிகமாகி போன் வெடித்து சிதறி இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து நாள்தோறும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வந்தாலும் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் கவனக்குறைவாக செயல்பட்டு வருவது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.