குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி.! குஜராத் மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி.!

குஜராத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.


bjp-wins-gujarat-corporation-election

குஜராத்தில் கடந்த பிப்ரவரி 21 அன்று  6 மாநகராட்சிகளுக்கு தேர்தல்  நடைபெற்றது. அங்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 409 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், "நன்றி குஜராத்! மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சித் தேர்தல்களின் முடிவுகள், வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் அரசியல் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை தெளிவாகக் காட்டுகின்றன. 


பாஜகவை மீண்டும் நம்பியதற்காக மாநில மக்களுக்கு நன்றி. குஜராத்திற்கு சேவை செய்வதற்கு எப்போதும் ஒரு மரியாதை" என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் முழுவதும் காங்கிரஸ் 44 இடங்களை மட்டுமே வென்றது, ஆனால் பாவ்நகர் நகராட்சியில் மட்டும் பாஜக 44 இடங்களை வென்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

"நன்றி குஜராத்! மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சித் தேர்தல்களின் முடிவுகள், வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் அரசியல் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை தெளிவாகக் காட்டுகின்றன. பாஜகவை மீண்டும் நம்பியதற்காக மாநில மக்களுக்கு நன்றி. குஜராத்திற்கு சேவை செய்வதற்கு எப்போதும் ஒரு மரியாதை" என்று அவர் டுவீட் செய்துள்ளார்.