இந்தியா Corono+

இந்தியாவிலையே தயாராகும் மருந்து..! கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை..! இந்திய மருத்துவர் கண்டுபிடிப்பு..!

Summary:

Bangalore doctor vishal rao says he found medicine for corono

சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 19 பேர் இறந்துள்ளனர், 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனவை கட்டுப்படுத்தவும், கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும் பல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்துவருகிறது. இந்நிலையில்,  பெங்களூரில் உள்ள மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு ஒரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார்.

புற்றுநோய் நிபுணரான மருத்துவர் விஷால் ராவ் இதுபற்றி கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. நாங்கள் கண்டுபிடித்துள்ள சிகிச்சை நோயாளிகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் நோயாளியின் உடல் கொரோனா வைரஸுடன் வலுவாக போராடும் என கூறியுள்ளார்.

ஊசிமூலம் நாங்கள் செலுத்தக்கூடிய சைட்டோகைன் நோயாளிகளுக்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என்றும், இந்த ஆய்வில் நாங்கள் ஆரம்ப நிலையில்தான் இருப்பதாகவும், இதன் முதல் தொகுப்பு இந்த வார இறுதிக்குள் தயாராகும் என்று  நம்புவதாக டாக்டர் விஷால் ராவ் கூறியுள்ளார்.


Advertisement