"வீதிக்கு சென்று கொரோனாவை பரப்புவோம் வாருங்கள்" என பதிவிட்டதால் ஏற்பட்ட பரபரப்பு! நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

"வீதிக்கு சென்று கொரோனாவை பரப்புவோம் வாருங்கள்" என பதிவிட்டதால் ஏற்பட்ட பரபரப்பு! நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்



An it employee calls to spread virus to all

பேஸ்புக்கில் "நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெளியில் சென்று வைரஸை பரப்புவோம் வாருங்கள்" என பதிவிட்ட முஜீப் முகம்மது என்பவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் புகார்கள் எழுந்து வருகின்றன.

முஜீப் முகம்மது என்ற பெயர் கொண்ட பேஸ்புக் பக்கத்தில் வைரஸை பரப்புவோம் வாருங்கள் என்று கொரோனா வைரஸை பரப்பும் நோக்கில் அந்த நபர் பதிவிட்டுள்ளார். உலகமே அஞ்சமடைந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவினை பார்த்தும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mujeeb mohammad

இந்நிலையில் சிலர் அதனை ஸ்கீரின் ஸாட் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிலர் அவரது பெயரை மற்ற சமூக வலைத்தளங்களில் தேடி அந்த நபர் பெங்களூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்றும் கண்டறிந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்திய அந்நபர்கள் முஜீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள அந்நிறுவனம் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும் அது உண்மயானால் சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.