ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் எழும் புதிய சிக்கல்.!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் எழும் புதிய சிக்கல்.!



america - johnsn & johnsn product - india

குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் டால்கர் பவுடர் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான பவுடர், ஷாம்புகளை தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குவது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரித்த பவுடரை சிறுவயதில் இருந்தே தான் உபயோகித்து வந்ததால் தனக்கு கருப்பபை புற்றுநோய் ஏற்பட்டது என்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார் அமெரிக்கப் பெண்மணி ஒருவர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இழப்பீட்டு தொகையாக இந்திய ரூபாயின் மதிப்பில் 2700 கோடி வழங்க  உத்தரவிட்டது. இதனால் இந்தியாவில் செயல்படும் அந்த நிறுவனத்தின் பொருட்களை உபயோகிப்பது தொடர்பாக மக்களுக்கு அச்சம் நிலவி வந்த நிலையில், 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஜான்ஸன் & ஜான்ஸன் பவுடர் மாதிரிகள் தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பது குறித்து, ஆய்வு செய்ய குடும்பநல அமைச்சகம் அதன் மண்டல அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.