எடப்பாடியார் முதல் நயன்தாரா வரை..! 9 மணிக்கு வீட்டில் விளக்கேற்றிய பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா?

9pm 9 minutes modi request


9pm 9 minutes modi request

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கொரோனவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று இரவு (05-04-2020) 9 மணிக்கு 9 நிமிடங்கள் இந்திய மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு ஏற்றுமாறு இந்திய பிரதமர் கேட்டுக்கொண்டார். மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்தியா முழுவதும் பெரும் நகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை மக்கள் தங்கள் வீடுகளில் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு விளக்குகளை ஏற்றினர்.

அதிலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை தங்கள் ஒற்றுமையை வெளிக்காட்டியுள்ளார். இந்நிலையில், மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என தமிழகத்தின் பெரும்பாலான பிரபலங்கள் தங்கள் வீடுகளில் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு ஏற்றியுள்ளனர்.