இந்தியா

நாயை கூட விட்டு வைக்கலயா.. நாயை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபர்.. கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..

Summary:

40 years old raped in Street dog

மஹாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியின் வேகில் எஸ்டேட் அருகே இருக்கும் ஃபுட் ஓவர் பாலத்திற்கு கீழ் 40 வயது நபர் ஒருவர் ஒரு பெண் நாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உணவளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை சிலர் ஃபுட் ஓவர் பாலத்திற்கு அருகில் சென்றுள்ளனர்.

அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பெண் நாய் ஒன்றுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை பார்த்த அந்த இளைஞர்கள் நாயர் என்ற விலங்குகள் நல ஆர்வலர் மூலம் போலீசில் புகார் செய்தனர். 

முதலில் லோக்கல் போலீசார் வழக்கை ஏற்க மறுக்கவே பின்னர் தானேவின் கமிஷனரிடம் நாயர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன் பிறகு சம்பத்தப்பட்ட அந்த நபரை இயற்கைக்கு புரம்பான உடலுறவு, மிருகவதை தடை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement