இந்த வயதிலேயே இப்படியொரு திறமையா? உலகளவில் புகழடைந்த இந்திய சிறுவன்!!

இந்த வயதிலேயே இப்படியொரு திறமையா? உலகளவில் புகழடைந்த இந்திய சிறுவன்!!


13-year-child-write-135-books

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மிரிகேந்திர ராஜ். 13 வயது நிறைந்த இந்த சிறுவன் ஆஜ்கா அபிமன்யு என்ற பெயரில் புத்தகங்களை எழுதி வருகிறார். மேலும் இந்த வயதிலேயே அவர் 135 புத்தகங்கள் வரை எழுதியுள்ளார். அனைத்து புத்தகங்களும் பக்கங்கள் முதல் 100 பக்கங்கள் வரை கொண்டது.

இந்நிலையில் 6 வயது முதலே புத்தகம் எழுதத் துவங்கிய மிரிகேந்திரராஜ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இவர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத் மற்றும் பல பிரபலங்கள் குறித்தும் புத்தகங்கள் எழுதி உள்ளார்.

mirikendra raj

இந்நிலையில் இது குறித்து மிரிகேந்திரா ராஜ் கூறுகையில், தான் இதுவரை நான்கு உலக சாதனைகளை படைத்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு லண்டன்  பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் தர இருப்பதாகவும் மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் பெரிய எழுத்தாளராகி ஏராளமான புத்தகங்களை எழுதி சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது பெரிய லட்சியம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை கண்ட பலரும் இந்த வயதிலேயே இப்படி ஒரு திறமையா என பாராட்டி வருகின்றனர்.