மாறிவரும் வாழ்க்கைமுறை.. வெகுவாக பாதிக்கப்படும் பெண்கள்..!

மாறிவரும் வாழ்க்கைமுறை.. வெகுவாக பாதிக்கப்படும் பெண்கள்..!



Woman Should Take Care Your Health Tamil Tips

காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்றார்போல நமது வாழ்க்கை முறையும் வெகுவாக மாறி வருகிறது. இதனால் நாம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல எதிர்மறையான விஷயங்களை சந்தித்து வருகிறோம். இந்த மாறி வரும் பழக்கம் காரணமாகவும், உணவு பழக்கம், உறக்கமின்மை, வாழ்வியல் நடைமுறை போன்ற பிரச்சனைகளால் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். 

பெண்களின் ஆரோக்கியத்தில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது வாழ்க்கை முறையில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படும் போது, ஹார்மோன்களில் சமநிலை பாதிக்கப்பட்டு முகப்பருக்கள், முடி உதிர்வு, உடல் பருமன், கருப்பை, நீர்க்கட்டி, நீரிழிவு நோய், தைராய்டு பிரச்சனை, மலட்டுத்தன்மை மற்றும் பார்வை குறைபாடு, குறைப்பிரசவம் போன்ற உடல் சார்ந்த பிரச்சினையும் ஏற்படுகிறது. 

Ladies Corner

அதனைப்போல மன அழுத்தம், மனச்சோர்வு, படப்படப்பு, உடலுறவில் ஆர்வம் இல்லாதது, கோபம் போன்ற உளவியல் சார்ந்த விஷயங்களும் ஏற்படுகிறது. குடும்பத்தின் தலைவியாகவும், ஆணி வேராகவும் கருதப்படும் பெண்கள் இந்த பிரச்சனைகளில் தாக்கத்தை சந்தித்து, அது குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்துகிறது. 

இதனைத்தவிர்ப்பதற்கு பெண்கள் உடற்பயிற்சி செய்தல், மன நலத்தை மேம்படுத்தும் விஷயங்களை மேற்கொள்ளுதல் நல்லது. மேலும், இதனால் ஏற்படும் பிற நோய்களின் அபாயத்தை குறைக்க, வாரத்தின் ஐந்து நாட்களில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அதனை போல ஆரோக்கியமான உணவு உடலுக்கு ஊட்டத்தை அளிக்கிறது. எக்காரணம் கொண்டும் உணவை தவிர்க்க கூடாது. 

Ladies Corner

மாவுச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பால், மீன், இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் மற்றும் மன நலத்திற்கு நன்மை கிடைக்கிறது. காபி மற்றும் வெள்ளை சர்க்கரை போன்றவற்றை எப்போதாவது குடிக்கலாம். 

ஆரோக்கியமான வாழ்விற்கு தூக்கம் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. இரவு நேரங்களில் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நன்றாக உறங்கவேண்டும். இது மன நலத்தை பாதுகாக்கிறது. சிரிப்பதற்கும், இயற்கையை ரசிப்பதற்கும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கும், சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கி செயல்பட வேண்டும். மனதிற்கு பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்தி வாழ்க்கைமுறை மாற்றங்களைத் தவிர்த்து உடல் நலத்தை பாதுகாப்பது நல்லது.