இந்தியா மருத்துவம்

இதுபோன்ற மனிதர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது.! மருத்துவரின் செயலால் குவிந்துவரும் பாராட்டுக்கள்.!

Summary:

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் (Sambalpur) மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் ஏழை மற்றும் எளிய மக்கள

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் (Sambalpur) மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக "ஒரு ரூபாய் கிளினிக்" ஒன்றைத் துவங்கி பலரது கவனத்தை பெற்றுள்ளார்.

அங்குள்ள பர்லா பகுதியில் இயங்கி வரும் விம்சர் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் மருத்துவர் ஷங்கர் ராம்சந்தானி என்பவர் அவரது பணி நேரம் போக மீதமுள்ள ஒய்வு நிறத்தில் எளிய மக்களுக்கு உதவும் வகையில்  ஒரு ரூபாய் கிளினிக்கை துவங்கியுள்ளார். இதுகுறித்து மருத்துவர் ஷங்கர் ராம்சந்தானி கூறுகையில், நான் மருத்துவமனையில் சேர்ந்தபோது தனியாக பயிற்சி செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனால் என்னால் தனியாக கிளினிக்கை தொடங்க முடியவில்லை. 

ஆனால், சமீபத்தில் நான் உதவி பேராசிரியராக பதவி உயர்வு பெற்றேன். இதனால், தனியாக பயிற்சி செய்ய பணி நேரம் முடிவடைந்த பின்னர் கிளினிக் தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இந்தநிலையில் தற்போது வாடகை வீட்டில் இந்த கிளினிக்கை தொடங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்த மருத்துவர் குறித்த தகவல் இணையத்தில் வெளியானதையடுத்து, "இதுபோன்ற மனிதர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது" என பலரும் மருத்துவரை பாராட்டி வருகின்றனர்.


Advertisement