தினமும் உங்களுக்கு இடுப்பு வலிக்கிறதா?.. இயற்கையான தீர்வுகள் இதோ..! அசத்தல் டிப்ஸ்..!!

தினமும் உங்களுக்கு இடுப்பு வலிக்கிறதா?.. இயற்கையான தீர்வுகள் இதோ..! அசத்தல் டிப்ஸ்..!!


natural tips for backpain

 

இடுப்பு வலி என்பது ஒவ்வொருவருக்கும் கடுமையான அசௌகரியத்தை கொடுக்கும் ஒன்றாகும். விபத்து, உடல் உழைப்பு மருந்துகளின் பக்க விளைவு காரணமாகவும் இடுப்பு வலி என்பது பலருக்கும் ஏற்படுகிறது. வயது அதிகரிக்கும் போது இடுப்பு வலியும் அதிகரிக்கும். ஏனெனில் நமது தசைநார்கள், தசைகள், மூட்டுகள், முதுகெலும்பு இணைப்புகள், நரம்புகளில் வலி ஏற்படுவதால் அதன் விளைவாக இடுப்பு வலியும் ஏற்படுகிறது. 

சில சமயங்களில் சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்றுப்பகுதி பிரச்சனை காரணமாகவும் இடுப்பு வலி ஏற்படலாம். நமது தசையில் வலியெடுத்து எரிச்சல், குத்துதல் போன்ற உணர்வு இருக்கும் பட்சத்தில் அங்கு இடுப்பு வலி உணரப்படும். இடுப்பு வலி இருக்கும் பட்சத்தில் நமது உடலை வளைத்தல், முறுக்குதல், தூக்குதல், நடப்பது போன்ற செயல்பாடுகளை செய்யும்போதும் வலி கடுமையாக இருக்கும். 

backpain

ஓய்வு எடுத்தாலும் இடுப்பு வலி என்பது குறையாது. உடல் பலவீனம், உணர்ச்சியின்மை போன்ற பிரச்சனையும் ஏற்படலாம். இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் ஐஸ் பேக்கை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். நேரடியாக பனிக்கட்டியை உடல் மீது வைக்காமல் ஒரு மெல்லிய துணியில் சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம். 

அதே போல இளமையிலிருந்து தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் நலனை மேம்படுத்தும். அத்துடன் தியானம் செய்வது, நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது, இயற்கையான எண்ணெய்களை உபயோகம் செய்வது போன்றவையும் உடலுக்கு நன்மையை கொடுக்கும். தூக்கமின்மை பிரச்சனையும் சரியாகும்.