வாயுத்தொல்லையை நீக்கி., செரிமானத்திற்கு உதவும் மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையல்.. வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?.!

வாயுத்தொல்லையை நீக்கி., செரிமானத்திற்கு உதவும் மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையல்.. வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?.!



how to prepare mango ginger amla thuvaiyal in home

செரிமானத்திற்கு உதவும் மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையல் எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையலை சாப்பிடுவதன் மூலம் வாயுத்தொல்லை நீங்கும். செரிமானத்திற்கும் உதவும். இதனை சாதத்தில் துவையலாக பிசைந்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - 2 தேக்கரண்டி 
பச்சை மிளகாய் - 2 
துருகிய தேங்காய் - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப 
புளி - சிறிதளவு 
மாங்காய் இஞ்சி - 50 கிராம் 
பெரிய நெல்லிக்காய் - 4 
கொத்தமல்லி - 1 கைப்புடி 

mango ginger amla

செய்முறை :

★முதலில் மாங்காய் மற்றும் இஞ்சியை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

★பின் நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி சிறுசிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

★ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், மாங்காய், இஞ்சி, நெல்லிக்காய், பச்சை மிளகாய், புளி, துருவிய தேங்காய், கொத்தமல்லி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்க வேண்டும்.

★பின் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து ஊற்றி இறக்கினால் மாங்காய் இஞ்சி நெல்லிக்காய் துவையல் தயாராகிவிடும்.

★இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், ருசி அமிர்தம் போல இருக்கும். தோசை மீதும் தடவி உண்ணலாம்.